கேரளாவை உலுக்கிய பாலியல் விவகாரம் -போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு பேரிடி -உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Update: 2024-10-19 06:57 GMT

கேரளாவை உலுக்கிய பாலியல் விவகாரம் -போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு பேரிடி -உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கேரளாவில் ஐபிஎஸ் அதிகாரி உட்பட காவல்துறை உயர் அதிகாரிகள் மீதான பாலியல் புகார் மீது 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மலப்புரம் மாவட்டம் பொன்னானி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த 2022-ம் ஆண்டு தனது பிரச்சனை தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றபோது, ஐ.பி.எஸ். அதிகாரி சுஜித் தாஸ் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தார். இப்புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காத நிலையில், கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அப்போது, புகாருக்கு உரிய ஆதாரங்கள் இல்லை என காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது. விசாரணையின் முடிவில், ஐபிஎஸ் அதிகாரி உட்பட காவல்துறை உயர் அதிகாரிகள் மீதான பாலியல் புகார் மீது 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க, மலப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதிக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்