ஏரி, குளங்களில் குளித்தவர்களை காவு வாங்கும் `அமீபா' மூளை காய்ச்சல்.. கிடைத்தது மருந்து

Update: 2024-07-30 09:14 GMT

ஏரி, குளங்களில் குளித்தவர்களை காவு வாங்கும் ``அமீபா' மூளை காய்ச்சல்.. கிடைத்தது உயிர்காக்கும் மருந்து

அமீபா மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உயிர் காக்கும் மருந்தை கேரள அரசு, ஜெர்மனியில் உள்ள தனியார் மருந்து நிறுவனத்திடம் இருந்து வாங்கியுள்ளது.

கேரளாவில் அமீபா மூளைக்காய்ச்சலால் கடந்த 2 மாதத்தில் மூன்று சிறார்கள் மரணம் அடைந்துள்ளனர். இந்நிலையில் கோழிக்கோட்டை சேர்ந்த 2 சிறுவர்களுக்கும், கண்ணூரை சேர்ந்த ஒரு சிறுவனுக்கும் அமீபா மூளைக்காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் கோழிக்கோட்டை சேர்ந்த 2 சிறுவர்களின் உடல்நிலை நன்றாக உள்ளதாகவும், கண்ணூரை சேர்ந்த 3 வயது சிறுவனுக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமீபா மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உயிர் காக்கும் மருந்தை, ஜெர்மனியில் உள்ள தனியார் மருந்து நிறுவனத்திடம் இருந்து, கேரள அரசு வாங்கியுள்ளது. மூன்று லட்சத்து 19 ஆயிரம் மதிப்பிலான இந்த மருந்தை, வி.பி.எஸ். ஹெல்த்கேர் என்ற தனியார் நிறுவனம், இலவசமாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்