"சபரிமலை அருகே பசுமை விமான நிலையம்" - கேரள முதல்வர் பினராயி விஜயன் தகவல்
சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக, எருமேலியை அடுத்த மணிமலா கிராமத்தில் மலைப்பகுதியில் பசுமை விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, கேரள சட்டசபையில் பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன், பசுமை நிலையம் அமைய இருக்கும் இடத்திற்கான பாதுகாப்பு அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளதாக கூறினார். பாதுகாப்பு தொடர்பான விண்ணப்பங்கள் மத்திய உள்துறையின் பரிசீலனையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சுற்றுச்சூழல் பாதிப்பு ஆய்வு மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான அறிக்கை தயார் செய்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், மேலாண்மை மேம்பாட்டு மையம் அளிக்கும் திட்ட மதிப்பீட்டு ஆய்வறிக்கையின்படி, விமான நிலைய கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என்றும் பினராயி விஜயன் தெரிவித்தார்.