களைகட்ட தொடங்கிய ஓணம்.. கண்கொள்ளா காட்சி

Update: 2024-09-07 01:43 GMT

கேரளாவில் ஓணம் பண்டிகை கோலாகலமாக தொடங்கியுள்ளது. திருப்புனித்துறை அத்தம் நகரில், அத்தசமய விழாவை குத்து விளக்கேற்றியும், கொடியசைத்தும் சபாநாயகர் ஷம்சீர் தொடங்கி வைத்தார். கேரள கலாச்சார முறைப்படி அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வடிவங்களில் வேடம் அணிந்து கலைஞர்கள் வீதி உலா வந்தனர். மாவேலிகள், புலிகள், தேயங்கள், ஸ்டில் காட்சிகள் மற்றும் பிற வண்ணமயமான காட்சிகள், காண்போருக்கு மனதில் இன்பத்தையும் மகிழ்ச்சியையும் ஊட்டியது. அடுத்த 10 நாட்களும் வீடுகளில் முகப்பில் மலர் கோலம் அமைத்து திருவோணத்தப்பனை வழிபட்டு, மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்க உள்ளனர்...

Tags:    

மேலும் செய்திகள்