24 வயது இளைஞரை காவு வாங்கிய கொடிய வைரஸ்... கேரளாவே நடுங்கும் `ஹை ரிஸ்க்’ லிஸ்ட்

Update: 2024-09-17 11:36 GMT

கேரள மாநிலம் மலப்புரத்தில் நிபா வைரசுக்கு மாணவர் பலியான நிலையில், அவருடன் தொடர்பில் இருந்த 15 பேருக்கு பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளதாக, அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். திருவாலி பகுதியைச் சேர்ந்த 24 வயது மாணவர் நிபா வைரசுக்கு பலியானார். நோய்த்தொற்று சந்தேகத்திற்குள்ளான நபர்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. இந்நிலையில், 26 பேர், ஹை ரிஸ்க் பட்டியலில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்