ஆடிய `தெய்யம்'- 154 பேரை சுழற்றிய `தீ' கனல்... பெய்ரூட்டை கண் முன் நிறுத்திய கேரள கோரம்

Update: 2024-10-29 15:43 GMT

காசர்கோடு மாவட்டம் விரர்காவு கோயிலில் "தெய்யம்" திருவிழாவின் போது ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளதாகவும், சிலர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நள்ளிரவு 12 மணியளவில் பட்டாசு வெடித்து ஏற்பட்ட விபத்தில் 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

காசர்கோடு அருகே உள்ள நீலேஸ்வரம் அஞ்சுதம்பலம் வீரர்காவு கோயில் திருவிழா கோலாகலமாக நடந்து வந்திருக்கிறது... இந்த திருவிழாவின் ஒரு பகுதியாக, "தெய்யம்" எனப்படும் களியாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றிருக்கிறது..

இதை ஒட்டி வாணவேடிக்கை நிகழ்ச்சியின் போது, ஏராளமான பக்தர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்துள்ளனர்.

அப்போது, எதிர்பாராத விதமாக பட்டாசு வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கிருந்த பக்தர்கள் ஓட்டம் பிடித்துள்ளனர்.. இந்த தீ விபத்தில் சிக்கிய குழந்தைகள், பெண்கள் உட்பட 154-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

97 பேர் 40% மற்றும் 60% தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாகவும், ஒரு சிலருக்கு தீவிர தீக்காய சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது..

Tags:    

மேலும் செய்திகள்