"குழந்தைகள் முன் உடலுறவு செய்தால்.." - கேரள ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

Update: 2024-10-18 08:51 GMT

"குழந்தைகள் முன் உடலுறவு செய்தால்.." - கேரள ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

குழந்தைகள் முன்னிலையில் உடலுறவில் ஈடுபடுவதும், நிர்வாணமாக உடலை காட்டுவதும் பாலியல் வன்கொடுமைக்கு உட்பட்டது என கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கேரளாவை சேர்ந்த பதாருதீன் என்பவர், லாட்ஜில் பெண் ஒருவருடன் உடலுறவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதை நேரில் கண்டு அதிர்ச்சியடைந்த பெண்ணின் 15 வயது மகன், பதாருதீனை திட்டியதாகவும், இதனால் சிறுவனை பதாருதீன் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மை இல்லை எனவும், வழக்கை ரத்து செய்யக் கோரியும், கேரள உயர்நீதிமன்றத்தில் பதாருதீன் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த நீதிமன்றம் குழந்தைகள் முன்னிலையில் உடலுறவில் ஈடுபடுவதும், நிர்வாணமாக உடலை காட்டுவதும் பாலியல் வன்கொடுமைக்கு உட்பட்டது என்று தெரிவித்தது. மேலும் சிறுவனை பதாருதீன் அடித்தபோது, சிறுவனின் தாய் அதை தடுக்கவில்லை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. எனவே குற்றம் சாட்டப்பட்டவர்கள் போக்சோ மற்றும் ஐபிசி பிரிவுகளின் கீழ் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்