கேரள மாநிலம் கண்ணூரில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியினர் இரவுநேர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எதிர்க்கட்சியினரின் கடுமையான எதிர்ப்பை மீறி குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய பா.ஜ.க. அரசு அமல்படுத்தியுள்ளது. இதனை எதிர்த்து பல்வேறு மாநிலங்களில் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்திவரும் நிலையில், கையில் தீப்பந்தம் ஏந்தியபடி ஐக்கிய ஜனநாயக முன்னணியினர் பேரணியாக வந்தனர்.