வெடிக்கும் பாலியல் பிரளயங்கள்.. புகார் கொடுத்ததால் போலீஸ் மிரட்டல்? - பரபரப்பை கிளப்பிய பிரபல நடிகை
கேரளாவில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ., நடிகர் முகேஷ் மீது பாலியல் புகார் கொடுத்ததால் போலீசார் தொந்தரவு செய்கிறார்கள் என நடிகை வேதனை தெரிவித்திருக்கிறார்.
எர்ணாகுளத்தை சேர்ந்த நடிகை பாலியல் பலாத்கார புகாரை கூறியதும் முகேஷ் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்தது. எர்ணாகுளம் நீதிமன்றம் முகேஷுக்கு முன்ஜாமீன் வழங்கியது. இதில் மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்று விசாரணை குழுவுக்கு கேரள அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகை, அரசு மேல்முறையீடு செய்யவில்லை என்றால், தானே நீதிமன்றத்தை அணுக போவதாக தெரிவித்திருந்தார். இந்த சூழலில் போலீசார் தேவையில்லாமல் தன்னுடைய குடும்பத்தாரின் தனிமனித உரிமையை பாதிக்கும் வகையில் செயல்படுவதாக நடிகை குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது