கெஜ்ரிவால் கைதுக்கு கருத்து தெரிவித்த ஜெர்மன் - உடனே இந்திய வெளியுறவுத்துறை சொன்ன விஷ
அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து கருத்து தெரிவித்த ஜெர்மன் வெளியுறவுத்துறைக்கு, இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் மற்றவர்களை போலவே, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைக்கு தகுதியானவர் என ஜெர்மன் ஊடகத்தில் அந்நாட்டு வெளியுறவுத்துறை கருத்து தெரிவித்திருந்தது. இது தொடர்பாக ஜெர்மன் வெளியுறவுத்துறைக்கு சம்மன் அனுப்பிய இந்திய வெளியுறவுத்துறை, உள்நாட்டு விவகாரத்தில் கருத்து தெரிவித்தமைக்காக கடுமையான ஆட்சேபனையை பதிவு செய்தது.