காவிரி நீர் பங்கீடு விவகாரம்...நீதிமன்றம் போட்ட உத்தரவு | India | Supreme Court

Update: 2023-08-29 17:09 GMT

காவிரியில் உரிய நீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு அளித்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.எஸ். நரசிம்மா, பிரசாந்த் குமார் மிஷ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 25ம் தேதி விசாரித்தது. காவிரியிலிருந்து உரிய நீரை தமிழ்நாட்டுக்கு திறந்தவிட பிறப்பித்த உத்தரவுகளை கர்நாடகா அமல்படுத்தியிருப்பது குறித்து செப்டம்பர் 1ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க, காவிரி மேலாண்மை ஆணையத்துக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், இது தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு இன்று வெளியாகியுள்ளது. அதில், கடந்த 2018ம் ஆண்டு தீர்ப்பின்படி உரிய நீரை திறந்து விட உத்தரவிட கோரி, விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தாக்கல் செய்த மனுவையும் விசாரணைக்கு ஏற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவுடன், இந்த மனுவையும் இணைத்து பட்டியலிட உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்