விடுதி மொட்டை மாடியிலிருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

Update: 2024-10-18 07:42 GMT

விடுதி மொட்டை மாடியிலிருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், தங்கும் விடுதி மொட்டை மாடியில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழந்த சம்பவத்தின் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன. பெங்களூரு கோணப்பா அக்ரஹாரா பகுதியில், தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு, தமிழகத்தைச் சேர்ந்த விஷ்ணு என்பவர், கடந்த சில மாதங்களாக தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு, விடுதியின் மொட்டை மாடிக்கு சென்று தனியாக நடந்து கொண்டிருந்த விஷ்ணு திடீரென கீழே விழுந்து, தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் மதுபோதையில் கீழே விழுந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்