கட்சி நிர்வாகிகளுக்கு ஓரினச்சேர்க்கை டார்ச்சர்? - தேவகவுடா பேரனுக்கு பறந்த அதிரடி உத்தரவு
பாலியல் புகாரில் கைதான சூரஜ் ரேவண்ணாவுக்கு ஜாமீன் கிடைத்ததை தொடர்ந்து அவர் சிறையில் இருந்து இன்று விடுவிக்கப்பட்டார். கர்நாடகாவை சேர்ந்த முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன் ரேவண்ணா மற்றும் பேரன்கள் பிரஜுவல் ரேவண்ணா மற்றும் சூரஜ் ரேவண்ணா ஆகியோர் மீது பல்வேறு பாலியல் புகார்கள் எழுந்ததை தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ரேவண்ணாவுக்கு மட்டும் ஏற்கனவே ஜாமீன் கிடைத்த நிலையில் மற்ற இருவரும் பரப்பன அக்ரஹாரம் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், சற்று வித்தியாசமாக சூரஜ் ரேவண்ணா மீது அவரது கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் இரண்டு பேர் ஓரினச்சேர்க்கை பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் ஒரு வழக்கில் அவருக்கு முன்ஜாமீன் கிடைத்திருந்த நிலையில் மற்றொரு வழக்கில் ஜாமீன் கூறி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்கி கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இரண்டு வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்த நிலையில் சிறையில் இருந்த சூரஜ் ரேவண்ணா இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்.