கர்நாடகாவில், திருநங்கை ஒருவரை சக திருநங்கைகள் பணத்திற்காக நிர்வாணப்படுத்தி தாக்கி சித்ரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கர்நாடகாவின் விஜயபுரா நகரத்தின் மத்திய பேருந்து நிலையத்தில் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. தாங்கள் யாசகம் பெற்ற மக்களிடம் யாசகம் பெற்றதால்.. அத்திருநங்கையை, சக திருநங்கைகள் தாக்கி நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்திருக்கின்றனர். சம்பந்தப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.