சகுனியாக நடித்தவர் மேடையிலேயே சரிந்து விழுந்து மரணம்... வெளியான திக் திக் காட்சி

Update: 2024-05-04 12:14 GMT

பெங்களூரு தேவனஹல்லி சாதனூர் கிராமத்தில் சித்திரை திருவிழாவின் ஒரு பகுதியாக மகாபாரதப் போரின் இறுதி கட்டமான குருக்ஷேத்திர நாடகம் நடைபெற்றபோது, சகுனி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த கலைஞர் திடீரென மாரடைப்பால் மேடையிலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது... ஹரதீசன ஹல்லி கிராமத்தை சேர்ந்த முனி கெம்பண்ணா என்பவர் சகுனி பாத்திரத்தை ஏற்று நடித்துக் கொண்டிருந்தார். நாடகத்தின் பரபரப்பான காட்சியில் நடித்துக் கொண்டிருந்த முனிகெம்பன்னா, திடீரென நிலை குலைந்து மயங்கி கீழே விழுந்து மாரடைப்பால் உயிரிழந்தார்... இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்