கார்கில் வெற்றி தினம்..! நாடாளுமன்றத்தில் வீரர்களுக்கு மவுன அஅஞ்சலி செலுத்திய எம்.பி.க்கள்

Update: 2024-07-26 15:03 GMT

மாநிலங்களவையில் பேசிய அவைத்தலைவர் ஜெகதீப் தங்கர், மோசமான வானிலை, கடினமான நிலப்பரப்பை பொருட்படுத்தாமல் அற்புதமான வெற்றிக்கு வழிவகுத்த ஆயுதப் படைகளின் உறுதி, அர்ப்பணிப்பை அவை பாராட்டுகிறது என்றார். நாட்டையும், ஒருமைப்பாட்டையும் காக்க தங்கள் இன்னுயிரை நீத்த வீர வீரர்களுக்கு இந்த அவை மரியாதை செலுத்துவதாக தெரிவித்தார். மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா, இந்திய ராணுவத்தின் துணிச்சல், தியாகத்தை நினைவுகூர்வோம் என்றார். இரு அவைகளிலும் எம்.பி.க்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தி ராணுவ வீரர்களுக்கு மரியாதை செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்