வீரியம் எடுக்கும் காவிரி விவகாரம்..தமிழக எல்லையில் கன்னட‌ அமைப்புகள் போராட்டம் | Karnataka

Update: 2023-09-23 02:21 GMT

ஓசூர் அருகே தமிழக - கர்நாடக எல்லையில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தியதால், அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டன. காவிரி விவகாரத்தில், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், தமிழக - கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் கன்னட ரக்ஷண வேதிகே அமைப்பினர், காவிரி மேலாண்மை ஆணையத்தை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். அவர்களின் போராட்டம் காரணமாக, தமிழக பேருந்துகள் எல்லையிலேயே நிறுத்தப்பட்டன. இதனால், பயணிகள் இறங்கி நடந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்