பெண்களின் நிதி அதிகாரத்திற்கு ஜன்தன் வங்கி கணக்கு திட்டம் வலுவான அடித்தளம் அமைத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மும்பையில் உள்ள Jio Convention சென்டரில், நடைபெற்று வரும் உலகளாவிய ஃபின்டெக் விழா 2024ன் சிறப்பு அமர்வில், பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் மோடி, இதற்கு முன்பு இந்தியாவின் கலாச்சார பன்முகத் தன்மையை கண்டு மக்கள் ஆச்சரியம் அடைந்த நிலையில், தற்போது இந்தியாவின் ஃபின்டெக் பன்முகத் தன்மையையும் கண்டு ஆச்சரியம் அடைவதாக கூறினார். மகளிர் சுய உதவி குழுவினரை ஜன்தன் வங்கி கணக்கு திட்டம் வங்கிகளோடு இணைத்து இருப்பதாக குறிப்பிட்ட பிரதமர், சுமார் 10 கோடிக்கும் அதிகமான பெண்கள் அதன் பலன்களை அறுவடை செய்து வருவதாக கூறினார். பெண்களின் நிதி அதிகாரத்திற்கு ஜன்தன் திட்டம் வலுவான அடித்தளம் அமைத்து இருப்பதாக குறிப்பிட்டார். டிஜிட்டல் எழுத்தறிவை அதிகரிக்கவும் சைபர் மோசடியை தடுத்த நிறுத்தவும் மிகப் பெரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டார்.