ட்விஸ்ட் வைத்த பாஜகவுக்கு ஷாக்... காஷ்மீரின் அரசியலை மாற்ற பரூக் மெகா பிளான்...
ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறலாம் என கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. அதேவேளையில் ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்காது என்ற கருத்துக் கணிப்புகளும் வெளியாகியிருக்கிறது. இந்த சூழலில், தேவையில்லை என்றாலும் மெகபூபா முப்தி கட்சி ஆதரவை பெறுவோம் என தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா கூறியுள்ளார். நாம் முன்னேற வேண்டும் என்றால் ஒன்றாக இணைய வேண்டும், மாநிலத்தை காக்க முயற்சி செய்ய வேண்டும் என்றவர், காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்