ஆந்திரா முதலமைச் சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா, இன்று காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தந்தை ராஜசேகர ரெட்டி மறைவிற்கு பின், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை தொடங்கிய ஜெகன்மோகன் ரெட்டி, தமது குடும்பத்தினர் மற்றும் கட்சியினர் ஆதரவோடு முதலமைச்சரானார். அவரது தங்கை ஷர்மிளா, தெலுங்கானாவில் ஒய்.எஸ்.ஆர்.டி.பி. கட்சியை தொடங்கி, பல்வேறு அதிரடியான போராட்டங்களை நடத்தினார். இந்த நிலையில் அவர், காங்கிரசில் இணைய உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இன்று காலை 10:30 மணி அளவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனே கார்கே மற்றும் சோனியா, ராகுல் முன்னிலையில் காங்கிரசில் இணைய உள்ளார்.
https://youtu.be/TNpJ62VWXrU