'சந்திரயான் -4' இறங்கும் ’மாஸ்டர் பீஸ்’-நிலவில் நடக்க போகும் தரமான சம்பவம்-மெகா பிளான்’ உடைத்த இஸ்ரோ

Update: 2023-11-23 16:29 GMT

அடுத்து இஸ்ரோவின் சந்திரயான் -4 திட்டம்

சந்திரயான் -3 Vs சந்திரயான் -4 - என்ன வித்தியாசம்?

நிலவில் இருந்து மண் எடுத்து வர இஸ்ரோ திட்டம்

நிலவு ஆராய்ச்சியில் ஜப்பானுடன் கைகோர்க்கும் இஸ்ரோ

சந்திரயான் -4 திட்டம் எப்போது செயல்படுத்தப்படும்?

சந்திரயான் -4 திட்டத்தை இஸ்ரோ எப்போது செயல்படுத்தவுள்ளது ? அதன் செயல்திட்டம் என்ன

என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

நிலவின் தென் துருவப் பகுதியில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை முதலில் கண்டுபிடித்து, உலகிற்கு அறிவித்தது, சந்திரயான் -1.

அடுத்து லேண்டர் மற்றும் ரோவருடன் நிலவை நோக்கி புறப்பட்ட சந்திரயான் -2வால் நிலவில் தரையிறங்க முடியாவிட்டாலும், அதன் ஆர்பிட்டர் தான் இன்று வரை நிலவை வெற்றிகரமாக சுற்றி வந்து, நிலவின் மேற்பரப்பின் பெரும்பகுதியை படம் பிடித்து பூமிக்கு அனுப்பியதோடு, பல முக்கிய தகவல்களையும் பகிர்ந்து வருகிறது.

இந்நிலையில், வெற்றிகரமாக நிலவின் தென்துருவ பகுதியில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற காரணமாகியது, சந்திரயான் -3 கொடுத்த வெற்றி.

நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய கையோடு, 14 நாட்கள் நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்து தகவல் அளித்தது, சந்திரயான் -3.

இப்படி இந்தியாவின் நிலவு பயணத்திற்கு விதை போட்ட சந்திரயான் திட்டத்தில் அடுத்து சந்திரயான் -4ஐ கையில் எடுக்கவுள்ளனர், இஸ்ரோ விஞ்ஞானிகள்.

சந்திரயான் -3ல் 30 கிலோ எடை கொண்ட ரோவர் அனுப்பப்பட்டிருந்த நிலையில், சந்திரயான் -4ல் 350 கிலோ எடை கொண்ட ரோவர் அனுப்பப்படவுள்ளது.

சந்திரயான் 3ல் ரோவர் 500 மீட்டர் ஊர்ந்து சென்று ஆய்வு செய்த நிலையில், சந்திரயான் -4ல் ரோவர் சுமார் ஒரு கிலோ மீட்டர் ஊர்ந்து சென்று ஆய்வு நடத்தவுள்ளது.

வெறும் ஆய்வுடன் நிறுத்தி கொள்ளாமல் நிலவின்

மேற்பரப்பில் உள்ள மண் அல்லது பாறை மாதிரிகளை சேகரித்து பூமிக்குக் கொண்டு வருவதில் தான் சந்திரயான் -3ல் இருந்து சந்திரயான் -4 முற்றிலும் வேறுபடுகிறது.

ஜப்பானுடன் சேர்ந்து சந்திரயான்-4 திட்டத்தைச் செயல்படுத்தும் இஸ்ரோ, இன்னும் 2 ஆண்டுகளில் சோதனை திட்டத்தையும், அடுத்த 5-7 ஆண்டுக்குள் திட்டத்தை முழுமையாக செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

சந்திரயான்-4 திட்டத்தில் லேண்டரை இந்தியாவும், ரோவரை ஜப்பானும் வடிவமைக்க உள்ளன.

தொடர்ந்து நிலவின் இருள் நிறைந்த தென்துருவப் பகுதி குறித்து ஆராய ஜப்பானின் ஜாக்சா விண்வெளி நிறுவனத்துடன் லூபெக்ஸ் என்ற மற்றொரு திட்டத்திலும் இஸ்ரோ கைகோர்த்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்