இஸ்ரேலில் 76ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், ஹமாசிடம் இருந்து பணயக் கைதிகளை மீட்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இஸ்ரேல் நாட்டில் சுதந்திர தினம், மே 13ஆம் தேதி மாலை சூரிய மறைவில் இருந்து 14ஆம் தேதி வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, 76ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் நேற்று மாலை முதல் தொடங்கியது. ஆனால், ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போர் நடைபெற்று வருவதால், இந்த ஆண்டு பாரம்பரிய முறைப்படி நடைபெறும் வாணவேடிக்கை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. டெல் அவிவ் நகரில் ஏராளமானோர் குவிந்து, ஹமாசால் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ள இஸ்ரேலியர்களை மீட்க வேண்டும் என வலியுறுத்தினர். ஜெருசலத்தில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில், பணயக் கைதிகளுக்காக காலி இருக்கைகளும் வைத்து தேசிய கீதம் பாடினர். பின்னர், சுடர் ஏற்றப்பட்டதும், பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு நடத்தப்பட்டது.