பிரசவத்தில் இறந்து போன பச்சிளம் சிசு.... ஊருக்குள் விடாமல் ஒதுக்கி வைத்த கிராமம்....
- கர்நாடகா - கொல்லரெட்டி
- பிரசவத்தில் இறந்து போன பச்சிளம் சிசு....
- ஊருக்குள் விடாமல் ஒதுக்கி வைத்த கிராமம்....
- தீட்டு பட்டுவிட்டதால் ஒதுக்கப்பட்ட குடும்பம்...
- மூட நம்பிக்கையால் பலியான உயிர்....
- பச்சை பசேலென படர்ந்திருக்கும் விவசாய நிலத்தில், கரும்புள்ளி வைத்தது போல காட்சியளிக்கும் இந்த சிறிய ஓலை கூடாரம் தான் ஒரு பச்சிளங்குழந்தையின் உயிரை பலிகொண்ட மயான மேடை
- அதிகாரிகள், மருத்துவக்குழுவினர்கள் என ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் அந்த கூரை கூடாரத்தை அலசி ஆராய்ந்தனர்.
- அடுத்த நொடியே பிள்ளையை பறிகொடுத்த தாய் தந்தை இருவரும் கூடாரத்தை அங்குலம் அங்குலம் பிரித்தி வீசி எரிந்தனர்.
- பச்சிளங்குழந்தைக்கும்... பலிவாங்கிய இந்த கூடாரத்திற்கும் என்ன சம்பந்தம் என்று விசாரனையில் இறங்கினோம்.
- கர்நாடகா மாநிலம் துமகூர் மாவட்டத்தில் உள்ளது கொல்லரெட்டி கிராமம். இந்த ஊரை சேர்ந்த சித்தேஷ் - வசந்தா தம்பதிக்கு கடந்த ஜூன் 22 ஆம் தேதி ஒரு ஆண் ஒரு பெண் என இரட்டை குழந்தை பிறந்திருக்கிறது.
- ஆனால் துரதிஷ்டவசமாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த ஆண் குழந்தை மருத்துவமனையிலேயே இறந்து போயிருக்கிறது.
- இதனால் மனமுடைந்த தம்பதியினர் இருவரும் மருத்துவனையில் இருந்து நலமுடன் இருந்த பெண் குழந்தையை எடுத்துக்கொண்டு ஊருக்குள் நுழைந்திருக்கிறார்கள்.
- அப்போது தான் அவர்களுக்கு காத்திருந்தது ஒரு பெரும் அதிர்ச்சி. எல்லையில் கூடி இருந்த கிராமத்து மக்கள் சித்தேஷ் வசந்தா தம்பதியை ஊருக்குள் விடாமல் தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள்.
- என்ன காரணம் ஏன் உள்ளே செல்ல கூடாது என கேட்ட போது தான் ஒரு அமானுஷ்ய கட்டுக்கதையை கட்டவிழ்த்துவிட்டு சித்தேஷ் வசந்தா தம்பதியை கலங்கடித்துள்ளனர்.
- உங்களின் மீது தீட்டு உள்ளது, நீங்கள் ஊருக்குள் வந்தால் பெரும் பாவம், கடவுளின் சாபத்திற்கு ஆளாகி ஊரே அழிந்துவிடும் என பகீர் கிளப்பி இருக்கிறார்கள்.
- அதனால் கைக்குழந்தையுடன் ஊருக்கு வெளியே கூடாரம் போட்டு
- தங்கிவிட்டு ஒரு மாதம் முடிந்த பிறகே ஊருக்குள் வரவேண்டும் என கண்டிப்பாக கூறி இருக்கிறார்கள்.
- இந்த மூட நம்பிக்கையை வேறு வழி இன்றி ஏற்றுக்கொண்ட தம்பதியினர் கிராமத்தின் எல்லையில் ஓலையில் கூடாரம் அமைத்து தங்கியிருக்கிறார்கள்.
- ஒரு மாதம் கொடுத்த கெடு, ஒரே வாரத்தில் விபரீதத்தை சந்தித்துள்ளது. கடந்த 2 நாட்களாக விடாமல் பெய்த குளிர் காத்து மழையால் பச்சிளங்குழந்தைக்கு குளிர் காய்ச்சல் வந்திருக்கிறது.
- மருத்துவமனைக்கும் செல்லாமல் கைவத்தியம் செய்து குழந்தையை குணப்படுத்த முயன்றுள்ளனர். ஆனால் அந்த வைத்தியம் பளிக்காமல் குழந்தை பரிதாபமாக இறந்து போயிருக்கிறது.
- இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், ஊர் மக்களிடம், குழந்தையின் பெற்றோரிடமும் விசாரனை நடத்திய போது தான், நடந்திருப்பது மூட நம்பிக்கையின் உச்சம் என்று தெரியவந்திருக்கிறது.
- ஆம்.... கொல்லரெட்டி கிராம மக்களின் குல தெய்வம் ஜீஞ்சப்பா மற்றும் எத்தப்பா.... இந்த இரண்டு தெய்வங்களும் மக்களோடு மக்களாக கண்ணுக்கு தெரியாமல் ஊருக்குள் வாழ்வதாக ஐதீகம். இந்த மக்கள் காட்டுக்கொல்ல சமூகத்தினர் என்று அழைக்கப்படுகின்றனர்.
- இவர்களின் பழமையான முறைமைகளில் ஒன்று இந்த சூதக் சடங்கு.
- அதாவது ஊருக்குள் எந்த பெண்ணுக்கும் குழந்தை பிறந்து இறந்தாலும், அந்த பெண்ணையும் அவரது குடும்பத்தையும் ஒரு மாத காலம் ஊரை விட்டு ஒதிக்கி வைப்பது வழக்கம்.
- ஏனெனில் இறப்பு நடந்த குடும்பம் தீட்டிற்கு ஆளாகி விடுகிறதாம். அதனால் அந்த குடும்பம் தீட்டுடன் ஊரில் வாழ்ந்தால், தங்களது கடவுளின் கோபத்திற்கு ஆளாகி ஊரை அழித்துவிடும் என்பது நம்பிக்கை.
- இதனாலேயே காலம் காலமாக இந்த நடை முறையை அந்த மக்கள் கடை பிடித்து வந்துள்ளனர். இத்தனை ஆண்டுகளாக குழந்தை இறந்து விட பெரியவர்கள் மட்டுமே இந்த சடங்கை செய்துள்ளனர்.
- முதன்முறையாக இரட்டைகுழந்தை பிறந்து அதில் ஒன்று இறந்து விட மற்றொரு குழந்தையுடன் தாய் சடங்கை செய்து வந்த நிலையில் தான் இப்படி ஒரு உயிர் பலி நடந்துள்ளது.
- இந்த சம்பவம் தொடர்பாக விசாரனை நடத்திய அதிகாரிகள், இதுபோன்ற அர்த்தமற்ற மூட நம்பிக்கைகளை கைவிடும் படி கண்டித்து சென்றுள்ளனர்.
- உலகம் எவ்வளவோ முன்னேறிய போதும், இந்த கிராம மக்கள் அறியாமையின் ஆணிவேரை கெட்டியாக பிடித்துக்கொண்டு மூட நம்பிக்கையில் மூழ்கி திளைப்பதை என்னவென்று சொல்வது.