பிரதமருக்கு தைரியம் இருந்தால்... காங். தலைவர் கார்கே சவால்

Update: 2024-03-12 02:54 GMT

அரசியல் சட்டத்தை மாற்ற வேண்டும் என்று பேசிய பாஜக மூத்த தலைவரை பிரதமர் மோடி கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறியுள்ளார். கர்நாடக மாநிலம், சித்தாபூரில் பேசிய பாஜக எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான அனந்த் குமார் ஹெக்டே, இந்து விரோத விஷயங்களை நீக்குவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மல்லிகார்ஜுன கார்கே, பிரதமருக்குத் தைரியம் இருந்தால், அரசியல் சட்டத்தை மாற்ற வேண்டும் என்று பேசியவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கூறினார்

Tags:    

மேலும் செய்திகள்