கோடி ரூபாய் சொத்து.. கோமா நிலையில் கணவன்.. மனைவிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Thanthitv
உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, கோமா நிலையில் உள்ள கணவரின் சொத்துக்களை கையாளும் வகையில் தன்னை பாதுகாவலராக நியமிக்கக் கோரி, சென்னையைச் சேர்ந்த சசிகலா என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்தார். இதை எதிர்த்து, சசிகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுவாமிநாதன், பாலாஜி அடங்கிய அமர்வு, கேரள உயர் நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த தீர்ப்பை சுட்டிக்காட்டி, கணவரின் சொத்துக்களை கையாள மனைவிக்கு அனுமதியளித்து உத்தரவிட்டது.
மேலும், கணவர் சிவகுமாரின் பாதுகாவலராக சசிகலாவை நியமித்த நீதிபதிகள், ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை விற்க சசிகலாவுக்கு அனுமதியளித்தனர். அந்த தொகையில், 50 லட்ச ரூபாயை சிவகுமார் பெயரில் நிரந்தர வைப்பீடாக முதலீடு செய்யவும், அதில் இருந்து வரும் காலாண்டு வட்டியை எடுத்து பயன்படுத்தவும் அனுமதி அளித்துள்ளனர்