"ஹிஜாப் தடை.. அப்போ பொட்டு வைக்க கூடாதுனு சொல்லுவீங்களா?" - நீதிபதிகள் சரமாரி கேள்வி

Update: 2024-08-09 14:56 GMT

ஹிஜாப் அணிவதற்கு மும்பை தனியார் கல்லூரியில் விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இதுபோன்ற தடை உத்தரவை பிறப்பிக்க வேண்டாம் என்று கூறிய நீதிபதிகள், பொட்டு வைத்தவர்களுக்கு அனுமதி இல்லை என கூற முடியுமா என்று கேட்டனர். எதை அணிய வேண்டும் என்பது மாணவியின் முடிவாகாதா என வினவிய நீதிபதிகள், மேல்முறையீடு மனு தொடர்பாக பதில் அளிக்க மகாராஷ்டிர அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 18க்கு தள்ளி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்