டெல்லியில் நடைபெறும் அனைத்து மாநில தலைமை தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை கூட்டத்தில், இந்திய தேர்தல் ஆணையத்தின் மேம்படுத்தப்பட்ட அதிகாரபூர்வ வலைத்தளத்தை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தொடங்கி வைத்தார். இதன்மூலம் வேட்பு மனு தாக்கல், வாக்களர் அட்டையில் திருத்தம் போன்ற அனைத்து சேவைகளும், வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்களுக்கு ஒரே வலைதளத்தில் வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.