சபரிமலையில் கொட்டிய கனமழை - நனைந்தபடி காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்

Update: 2023-11-22 04:01 GMT

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெய்த கன மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஐயப்பனை தரிசனம் செய்தனர்.

புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில், கார்த்திகை மாத நடை திறக்கப்பட்ட நாளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர். ஐந்தாம் நாளான நேற்று மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் மற்றும் பம்பை பகுதியில் கன மழை கொட்டி தீர்த்தது.

மழையையும் பொருட்படுத்தாமல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பம்பையில் இருந்து சபரிமலைக்கு நடந்து வந்தனர். கோவில் சன்னிதான பகுதியிலும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கோவில் படிக்கட்டுகளில் அருவி போல மழைநீர் கொட்டியபோதும், பக்தர்கள் பரவசத்துடன் ஐயப்பனை தரிசனம் செய்து சென்றனர். போலீஸ் மற்றும் பேரிடர் மேலாண்மை குழுவினரும் பக்தர்கள் பாதுகாப்பாக வந்து செல்ல உதவினர்.

Tags:    

மேலும் செய்திகள்