பேராசிரியருக்கு கிடைத்த அல்வா.. நொடியில் மறைந்து போன ரூ.4.81 லட்சம்..புதுச்சேரியில் அதிர்ச்சி சம்பவம்
புதுச்சேரியை சேர்ந்த தனியார் மருத்துவர் கல்லூரி பேராசிரியர் ஒருவர், சட்டவிரோதமாக பல பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதை தெரிந்து கொண்ட மர்மநபர் ஒருவர், ஸ்கைப் கால் மூலம் பேராசிரியரை தொடர்பு கொண்டு, மும்பை சைபர் கிரைம் போலீசார் எனக் கூறி மிரட்டியுள்ளார். தொடர்ந்து, பேராசிரியரின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகவும், அதனை சரி செய்ய பணம் கேட்டும் மிரட்டிய நிலையில், அவரின் வங்கி கணக்கிற்கு சுமார் நான்கரை லட்ச ரூபாய் பணத்தை பேராசிரியர் டெபாசிட் செய்திருக்கிறார். இறுதியில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் போலீசில் புகாரளித்த நிலையில், பேராசிரியர் பணம் அனுப்பிய வங்கி கணக்கை முடக்கிய போலீசார், கொள்ளையர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.