ஆளுநர் Vs மாநில அரசு... நாகலாந்து கவர்னர் பரபரப்பு பேட்டி | Governor

Update: 2024-01-03 06:11 GMT

ஆளுநரின் கடமைகள் என்ன? ஒரு மாநில அரசின் கடமைகள் என்ன? உரிமைகள் என்ன? என்பது குறித்து, அரசியலமைப்பு சாசனத்தில் மிகத்தெளிவாக வகுத்திருக்கிறார்கள் என்று, நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். வீரபாண்டிய கட்டபொம்மனின் 265-வது பிறந்த நாள் விழா, இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. அவரது நினைவை போற்றும் சொற்பொழிவு விருதுநகரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஆளுநர் இல.கணேசன், கட்டபொம்மனின் வரவாற்று நினைவலைகளை பகிர்ந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநில அரசுக்கும், ஆளுநருக்கும் பிரச்சனை வருமானால், அரசியல் சாசனத்தை ஆராய்ந்து பார்த்தாலே குழப்பம் தீரும் என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்