இந்தியாவில் கூகுளின் அடுத்த திட்டம் - போட்டு உடைத்த சுந்தர் பிச்சை - ஆச்சர்யத்தில் உறைந்த பிரதமர்
கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சையுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக கலந்துரையாடினார்.
இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி சுற்றுச்சூழலை விரிவுபடுத்துவதில் கூகுளின் திட்டம் குறித்து பிரதமர் மோடியும், சுந்தர் பிச்சையும் விவாதித்தனர். மேலும் இந்தியாவில் Chromebookகளை தயாரிப்பதற்காக ஹெச்பியுடன் கூகுள் கூட்டு வைத்திருப்பதை பிரதமர் பாராட்டினார். கூகுளின் 100 மொழிகள் முயற்சியை பாராட்டிய பிரதமர் மோடி, இந்திய மொழிகளில் AI கருவிகளை கிடைக்கச் செய்வதற்கான முயற்சிகளை ஊக்குவித்தார். மேலும், வரும் டிசம்பர் மாதம் டெல்லியில் இந்தியா நடத்தும் AI உச்சிமாநாட்டில் பங்கேற்க வருமாறு கூகுள் நிறுவனத்திற்கு பிரதமர் அழைப்பு விடுத்தார். இதையடுத்து, GPay மற்றும் UPI ஆகியவற்றின் வலிமை மற்றும் வரம்பைப் பயன்படுத்தி, இந்தியாவில் நிதிச் சேர்க்கையை மேம்படுத்த கூகுள் திட்டமிட்டு இருப்பதாக பிரதமரிடம் சுந்தர் பிச்சை தெரிவித்தார்.