இன்று தங்கம் விலை சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து, 43 ஆயிரத்து 640 ரூபாயாக அதிகரித்துள்ளது. சென்னையில் கிராம் ஒன்று 5 ஆயிரத்து 455 ரூபாயாக விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 20 பைசா அதிகரித்து, 76 ரூபாய் 70 பைசாவாக விற்பனையாகிறது. மே 5இல், 46 ஆயிரத்து 200 ரூபாயாக புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை பின்னர் படிப்படியாக குறைந்து, இன்று மீண்டும் சற்று அதிகரித்துள்ளது.