லட்சக்கணக்கில் உயிருடன் கரை ஒதுங்கிய மீன்கள்.. செய்வதறியாது திகைத்த மக்கள்
திருச்சூர் தளிக்குளம் மற்றும் கோழிக்கோடு கோனாடு கடற்கரையில் கூட்டம்கூட்டமாக கரை ஓதுங்கிய மத்தி மீன்கள் அள்ளி சென்ற பொதுமக்கள்:
கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்திலுள்ள தளிகுளம் கடற்கரையில் மத்தி மீன்கள் கூட்டம்கூட்டமாக கரை ஓதுங்கின இவற்ரை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் மத்தி மீன்களை அள்ளி சென்றனர். மத்தி மீன்கள் கரை ஓதுங்கியதை கேள்விப்பட்டு பலர் கடற்கரைக்கு வந்தனர். பலர் வருவதற்குள் மீன்களை எல்லாம் அள்ளி சென்றதால் பலரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். தளிக்குளம் கரையில் மத்தி மீன்கள் கூட்டமாக கரை ஓதுங்கியது கடந்த 15 நாட்களில் ஆறு முறைக்கு மேல் கரை ஒதுங்கியது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதே போல் கோழிக்கோடு கோனாடு கடற்கரையிலும் மத்தி மீன் கூட்டம்கூட்டமாக கரை ஓதுங்கின அவற்றை அப்பகுதியினர் அள்ளி சென்றனர்.