மகளை திருமணம் செய்து கொடுக்க மறுத்த தந்தை..- நண்பருடன் சேர்ந்து இளைஞர் வெறிச்செயல்

Update: 2023-08-18 08:49 GMT

கண்ணூரில் மகளை திருமணம் செய்து கொடுக்க மறுத்த தந்தையை வீடு புகுந்து வெட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டார். கேரளா மாநிலம் கண்ணூரிலுள்ள இருக்கூர் மாமாமன் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மகளை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கண்ணூர் தாயிலைச் சேர்ந்த அஜய் என்பவர் பெண் கேட்டுள்ளார். இதற்கு ராஜேஷ் மறுத்தநிலையில், அஜயை சத்தம்போட்டும் அனுப்பி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அஜய் தனது நண்பர் அஞ்சித்துடன் சேர்ந்து ராஜேஷை வெட்டிவிட்டு தப்பிவிட்டார். இதில் பலத்தகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தப்பி ஓடிய அஜயை கண்ணூர் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அஞ்சித்தை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்