கனமழை காரணமாக திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 2வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. பேச்சிப்பாறை, திற்பரப்பு, குலசேகரம், திருவட்டார் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது. பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு 2வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.