"சோப்பு போட்டால் பணமாக மாறும்"...ரூ.30 லட்சத்துக்கு.. ரூ.3 கோடி..

Update: 2024-02-22 07:04 GMT

"சோப்பு போட்டால் பணமாக மாறும்"...ரூ.30 லட்சத்துக்கு.. ரூ.3 கோடி..இப்படியும் கள்ளநோட்டு வந்துருச்சு.. உஷார்

ஆந்திராவில் 3 கோடி ரூபாய் மதிப்பிலான கள்ளநோட்டுக்களை கடத்திச் சென்று கைதான இருவர் போலீசில் அளித்த வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திராவின், விசாகப்பட்டினம் அருகே 3 கோடி ரூபாய் மதிப்பிலான கள்ளநோட்டுகளுடன் இருவர் காரில் பயணம் செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனடிப்படையில், விசாகப்பட்டினத்தில் வைத்து காரை மடக்கிய போலீசார், காருக்குள் இருந்த பாஸ்கர் ராஜூ மற்றும் சீனிவாச ராவ் ஆகிய இருவரை பிடித்து திவீர விசாரணை நடத்தினர். விசாரணையில், இருவரும் ஆந்திர மாநிலம் அன்னவரத்தை சேர்ந்த கனிராஜூ என்பவரிடம்... சுமார் 30 லட்ச ரூபாய் கொடுத்து, 3 கோடி ரூபாய் மதிப்பிலான கள்ளநோட்டுகளை வாங்கி வந்தது தெரியவந்தது. மேலும், கள்ளநோட்டு அச்சிடுவதில் புதிய தொழில்நுட்பமாக, பேப்பரை ரசாயனக் கலவை ஒன்றில் நனைத்து சோப்பு போட்டால் 500 ரூபாய் கள்ளநோட்டாக மாறிவிடும் என இருவரும் வாக்குமூலம் அளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 3 கோடி ரூபாய் கள்ளநோட்டுகளை கைப்பற்றி இருவரையும் சிறையில் அடைத்த போலீசார், இந்த சம்பவத்தில் தலைமறைவாக இருக்கும் முக்கிய புள்ளி கனி ராஜை 5 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்