ஒடிசாவில் தேர்தலை ஏற்பாடுகளுக்கான ஆயத்த பணிகளை, தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்றத் தேர்தலை நடத்தவும், ஒடிசாவில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தவும் தயாராக இருப்பதாக கூறினார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், இந்த ஜனநாயக திருவிழாவில் ஒடிசாவில் அனைத்து வாக்காளர்களும் பங்கேற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். ஒடிசாவில் இந்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து தேர்தல் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.