ED-ன் அடுத்த அதிரடி...சிக்கலில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனர்

Update: 2023-09-03 09:16 GMT

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு வழங்கிய 848 கோடியே 86 லட்சம் ரூபாய் கடனில், 538 கோடியே 62 லட்சம் ரூபாயை அந்நிறுவனம் திருப்பி செலுத்தவில்லை என கனரா வங்கி குற்றம் சாட்டியது. இதுதொடர்பாக வழக்குப்பதிந்த சி.பி.ஐ, ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது. இந்த மோசடி குறித்து அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. வரும் 11-ம் தேதி வரை நரேஷ் கோயலை காவலில் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்நிலையில், வங்கியில் இருந்து பெற்ற கடன் மூலம் இங்கிலாந்து, துபாயில் நரேஷ் கோயல் சொத்துகளை வாங்கியுள்ளதாக, அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. தொழில்முறை மற்றும் ஆலோசனை செலவுகள் என, சந்தேகத்திற்குரிய வகையில், 1000 கோடி ரூபாய் செலவினம் காட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்