பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத்தின் நெருங்கிய உதவியாளர் சுபாஷ் யாதவ் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். சுபாஷ் யாதவ், மணல் விற்பனைத் தொழிலில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பாட்னா தனபூர் பகுதியில் உள்ள சுபாஷ் யாதவ் வீட்டில், அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.