ஜி-20 மாநாட்டில் உலக தர பரிசு - வியக்க வைக்கும் பொருட்கள்- என்னனென்ன தெரியுமா..?

Update: 2023-09-12 13:49 GMT

டெல்லி ஜி-20 மாநாட்டில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு நீலகிரி தேயிலை உள்ளிட்ட பொருட்கள் பரிசளிக்கப்பட்டன.

டெல்லி ஜி-20 மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இதில், இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் கைவினை கலைகளின் திறனை எடுத்துக்காட்டும் பல்வேறு பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன. ஆந்திராவில் உள்ள அரசு பள்ளத்தாக்குகளில் விளையக்கூடிய அரக்கு காபி, காஷ்மீர் குங்குமப்பூ, சுந்தரவன காடுகளில் விளையக்கூடிய பலவகை பூக்களில் இருந்து சேகரிக்கப்படும் தேன், சந்தூக் என அழைக்கப்படும் பித்தளை வார்ப்புடன் கூடிய சிறிய அளவிலான மரப்பெட்டி உள்ளிட்ட பொருட்கள் பரிசுப் பெட்டகமாக வழங்கப்பட்டன. மேலும், மேற்குவங்கத்தில் விளையும் டார்ஜிலிங் தேயிலை மற்றும் தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் விளையக்கூடிய புகழ்பெற்ற நீலகிரி தேயிலை போன்றவையும் உலக நாடுகளின் தலைவர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்