பிறந்த நாள் கொண்டாட்டத்தை ரத்து செய்த தேவகவுடா - காரணம் என்ன?

Update: 2024-05-17 02:24 GMT

முன்னாள் பிரதமர் தேவகவுடா, வரும் மே 18ஆம் தேதி 91ஆவது வயதை நிறைவு செய்து 92 ஆவது வயதில் காலடி எடுத்து வைக்கிறார். ஒவ்வொரு வருடமும் தேவகவுடாவின் பிறந்தநாளை, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி சார்பில் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ, ரேவண்ணா மீதான கடத்தல் வழக்கு விவகாரம் காரணமாக, பிறந்தநாள் கொண்டாடப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த காரணங்கள் எதையும் குறிப்பிடாமல், தவிர்க்க முடியாத காரணத்தால் இந்த ஆண்டு பிறந்தநாள் கொண்டாடவில்லை என தேவகவுடா அறிவித்துள்ளார். மேலும் தொண்டர்கள் யாரும் அன்றைய தினத்தில் வர வேண்டாம் என்றும், இருந்த இடத்தில் இருந்து மனதார வாழ்த்துங்கள் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்