டெல்லி ஆளுநர் மாளிகையில் அதிஷியின் பதவியேற்பு விழா

Update: 2024-09-21 04:48 GMT

டெல்லியில் முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டுள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, புதிய முதல்வராக அதிஷியை நியமித்து உத்தரவிட்டுள்ளார். அதிஷி தலைமையில் 5 புதிய அமைச்சர்களின் நியமனத்திற்கும் அவர் ஒப்புதல் வழங்கி உள்ளார். அதிஷியின் பதவியேற்பு விழா, ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற உள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததை எடுத்து புதிய முதல்வராக தற்போது நிதியமைச்சராக இருக்கும் அதிஷி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்