டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு மோசமடைந்து வருவதற்கு, ஹரியானா அரசு யமுனையில் தண்ணீர் விடாததே முக்கியக் காரணம் என குற்றம் சாட்டினார். டெல்லி தண்ணீருக்காக யமுனையை நம்பியுள்ளதாகவும், பங்கு நீரை விடுவிக்ககோரி உச்சநீதிமன்றத்தில் முறையிட உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தண்ணீர் பிரச்சனை உள்ள இடங்களில், கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், எந்த பகுதியில் தண்ணீர் பிரச்னை உள்ளதோ, 1916 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டால் டேங்கர் மூலம் தண்ணீர் அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்தார்....