டெல்லியில் தமிழ்.. குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தங்கரிடம் இணையமைச்சர் L.முருகன் வைத்த கோரிக்கை
மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் எல்.முருகன், குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தங்கரை அவரது இல்லத்தில் சந்தித்தார். டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி இலக்கியத்திற்கென்று புதிய ஆராய்ச்சி மையத்தையும், புதிய துறையையும் உருவாக்க வேண்டும் என அமைச்சர் முருகன் அவரிடம் கோரிக்கை விடுத்தார். மேலும் தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தை பயிற்றுவிக்கும் வகையில் மற்ற கல்லூரிகளிலும் துறைகளிலும் புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.