"குப்பை கூளத்தை சுத்தம் செய்தால் தான்... தேர்தல் முடிவு அறிவிக்கப்படும்" - ஹைகோர்ட் அதிரடி
டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலுக்காக ஒட்டபட்ட போஸ்டர்களை சுத்தம் செய்தால்தான்
தேர்தல் முடிவுகள் அறிவிக்க அனுமதிக்கப்படும் என
வேட்பாளர்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நிபந்தனை
விதித்துள்ளது. குப்பை கூளத்தை சுத்தம் செய்த மறுநாளே மாணவர் சங்கத் தேர்தல் முடிவுகளை அறிவிக்க
அனுமதிக்கப்படும் என்று தெரிவித்ததுடன், இது பற்றிய
நிலவர அறிக்கை தாக்கல் செய்ய மனுதாரருக்கும், வேட்பாளர்களுக்கும், டெல்லி மாநகராட்சிக்கும், டெல்லி
மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கும் உத்தரவிட்டது.