இடிந்து விழுந்த ஏர்போர்ட் மேற்கூரை...பலி.. காயம்..நொறுங்கிய கார் - 130 விமானங்கள் ரத்து

Update: 2024-06-29 13:43 GMT

டெல்லி சர்வதேச விமான நிலையத்தின் முதலாவது முனையத்தில், விமான சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், சுமார் 130 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கனமழை காரணமாக நேற்று இந்த முனையத்தில், மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்த நிலையில், 8 பேர் காயமடைந்தனர். இதையடுத்து, மறு உத்தரவு வரும் வரை, விமான நிலையத்தின் முதலாவது முனையத்தில் இருந்து விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்