தன் ரசிகரை சிதைத்து கொன்ற பிரபல நடிகருக்கு சிறையில் சுகபோக வாழ்வு.. அரசையே ஆட்டிய ஒற்றை போட்டோ

Update: 2024-08-29 05:41 GMT

தன் ரசிகரை சிதைத்து கொன்ற பிரபல

நடிகருக்கு சிறையில் சுகபோக வாழ்வு

அரசையே ஆட்டிய ஒற்றை போட்டோ

அதிரடியாக இறங்கி பிரித்து போட்ட கோர்ட்

கொலை வழக்கில் கைதான நடிகர் தர்ஷனுக்கு சிறைக்குள் சலுகைகள் வழங்கப்பட்டது அம்பலமான நிலையில், அவரை வேறொரு சிறைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதன் பின்னணி குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...

தன் ரசிகரையே கடத்திச் சென்று சித்ரவதை செய்து கொன்று கர்நாடகாவை அதிரச் செய்திருந்தார் நடிகர் தர்ஷன்...

கொலை வழக்கில் நடிகர் தர்ஷன், அவரின் தோழி பவித்ரா கவுடா என சுமார் 16 பேரை கர்நாடகா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்...

இதில், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த தர்ஷன், தனது மேலாளர் மற்றும் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரவுடி ஒருவருடன், கையில் சிகரெட்டுடனும், தேநீர் கோப்பையுடனும் பேசிக் கொண்டிருந்த புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது...

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சிறைக்குள் தர்ஷனுக்கு சலுகைகள் வழங்கப்பட்டது உறுதியானது...

இதையடுத்து, சிறைத்துறையை சேர்ந்த 9 பேர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்...

தொடர்ந்து தர்ஷனையும், அவரது கூட்டாளிகளையும் தனித்தனி சிறையில் அடைக்க கர்நாடக அரசு முடிவு செய்த நிலையில், தர்ஷனை பெல்லாரி சிறைக்கு மாற்றி பெங்களூரு 24 ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது....

இதனிடையே, நீதிமன்ற காவல் முடிந்து நடிகர் தர்ஷன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்...

அப்போது, தர்ஷனுக்கு ஜாமின் வழங்க கோரி அவரது தரப்பில் இருந்து ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது...

இதை எதிர்த்து வாதிட்ட அரசு தரப்பு, இன்னும் சில சாட்சியங்களை விசாரிக்க வேண்டி இருப்பதாகவும், தடயவியல் துறையில் இருந்து முழுமையான அறிக்கைகள் பெற வேண்டி இருப்பதாகவும் தெரிவித்தது..

இந்நிலையில், தர்ஷனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், அவரை செப்டம்பர் 9 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டது...

இதை தொடர்ந்து, நடிகர் தர்ஷனை பெல்லாரி சிறையில் அதிகாரிகள் அடைத்தனர்..

அதேபோல், தர்ஷன் உடன் சேர்ந்து கைதான கைதிகள், மைசூர், ஷிமோகா குல்பர்கா மற்றும் பெலகாவி ஆகிய மாவட்டங்களில் உள்ள சிறைகளுக்கு மாற்றப்பட்டனர்...

அதே நேரம் தர்ஷனின் தோழியான பவித்ரா கவுடா மற்றும் இவ்வழக்கில் தொடர்புடைய இரண்டு பேர் பரப்பன அக்ரஹார சிறையிலேயே தொடர்ந்து அடைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது...

Tags:    

மேலும் செய்திகள்