கரையை தொட்டது `டானா’ - 15 லட்சம் பேர் வெளியேற்றம் - ஆக்ரோச ஆட்டம்

Update: 2024-10-25 03:16 GMT

கரையை தொட்டது `டானா’ - 15 லட்சம் பேர் வெளியேற்றம் - ஆக்ரோச ஆட்டம்

டானா புயல் ஒடிசா அருகே கரையை கடக்க தொடங்கியுள்ள நிலையில் 10 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

ஒடிசாவின் கடலோரப் பகுதிகளில் டானா புயல் கரையை கடக்கத் தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒடிசாவின் பாரதீப்பில் இருந்து கிழக்கு வடகிழக்கே 50 கிலோ மீட்டர் தொலைவிலும், தென்கிழக்கே மேற்கு வங்கத்தில் உள்ள சாகர் தீவில் இருந்து 160 கிலோ மீட்டர் தென்மேற்கிலும் நிலைகொண்டிருந்த டானா புயல் கரையை கடக்க தொடங்கியுள்ளது. இதனால் பஹ்டர்க், கெண்ட்ரபெரா, பாலசோரா, ஜெகத்சிங்பூர் ஆகிய கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. புயல் வடக்கு-வடமேற்கு திசையை நோக்கி 15 கிலோமீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒடிசா மாநிலத்தில்15 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கிழக்கு கடற்படை தலைமையகம், ஆந்திரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள கடற்படை அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து, விரிவான பேரிடர் மீட்பு செயல்முறையை வகுத்துள்ளதாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்