ரயில்வே பணி வழங்க நிலம் லஞ்சமாக பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், பீகார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவிக்கு நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது. இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், டெல்லி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டது. அதன்பேரில், ராப்ரி தேவி, அவரது மகள் மிஸா பார்தி, ஹேமா யாதவ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இந்நிலையில், ராப்ரி தேவி உள்ளிட்டோருக்கு இடைக்கால ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.