சார்பதிவாளர் அலுவலங்களில் பல கோடி மதிப்பில் போலி பத்திரங்கள்.. அதிர்ச்சியில் அதிகாரிகள் | Pondicherry

Update: 2023-09-05 01:57 GMT

புதுச்சேரியில் போலி பத்திரங்கள் தயாரித்து நில அபகரிப்புகள் நடப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களின் சொத்துகளுக்கு போலி பத்திரங்கள் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் காமாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நில அபகரிப்பு தொடர்பாக, சார்பதிவாளர் சிவசாமி உள்பட 17 பேரை கைது சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். வழக்கு தொடர்பாக, உழவர்கரை, பாகூர் சார்பதிவாளர் அலுவலகங்களில் சிபிசிஐடி போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, உழவர்கரை சார்பதிவாளர் அலுவலகத்தில் 23 போலி உயில் பத்திரங்களும், பாகூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் 3 போலி உயில் பத்திரங்கள் இருப்பதும் தெரியவந்து உள்ளது. புதுச்சேரியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்